திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (15:12 IST)

சமஸ்கிரதத்தை பிரபலப்படுத்த மத்திய அரசு செலவு செய்தது இவ்வளவா??

கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிரதத்தை பிரபலப்படுத்த மத்திய அரசு ரூ.643.84 கோடி செலவு செய்துள்ளது

மத்திய அரசு, கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிரதத்தை மக்களிடம் கொண்டு செல்ல, ரூ.643.84 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார அமைச்சகம் வெளிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

2017-18 ஆம் ஆண்டில் ரூ.198.31 கோடியும், 2018-19 ஆம் ஆண்டில் ரூ.214.38 கோடியும், 2019-20 ஆம் ஆண்டில் ரூ.231.15 கோடியும் சமஸ்கிரதத்தை பரப்ப செலவிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் தமிழின் மேம்பாட்டிற்காக சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிளாசிக்கல் தமிழ் (மனிதவள மேப்பாட்டு அமைப்பின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பு) மூலம் வழங்கப்படும் தமிழுக்கான செலவில் 2017-18 ஆம் ஆண்டில் 10.59 கோடியும், 2018-19 ஆம் ஆண்டில் ரூ.4.65 கோடியும், 2019-20 ஆம் ஆண்டில் ரு.7.7 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. தமிழுக்கு கணிசமாக குறைந்துள்ளதை காணலாம்.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு மத்திய அரசு செலவு செய்த தொகையை விட சமஸ்கிரதத்திற்கு 29 மடங்கு அதிகம் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.