தொடர்புடைய செய்திகள்
- கர்நாடக காங்கிரஸ் அரசில் ரூ. 36,000 கோடி முறைகேடு நடந்துள்ளது.. பாஜக குற்றச்சாட்டு..
- கவனக்குறைவாக சாலையை கடந்த நபர்.. விபத்தில் ஒரு குடும்பமே சிதைந்த பரிதாபம்..!
- மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி கொடுத்துள்ளது.. அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...!
- ரூ. 350 கோடி வரை பாக்ஸ் ஆபீஸ் வேட்டை! ஓடிடி-க்கு வரும் சூர்யாவின் 'கருப்பு
- ரூ.95,000 மதிப்புள்ள காலணிகளை உதைத்தார் பிரியங்கா சோப்ரா: பிரபல ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு!
பிரியாணி டேட் விவகாரம் : இன்ஸ்டாவை மூடிய நகைச்சுவை நடிகர் பிரணித் மோர்
சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக "ரூ.370 பிரியாணி டேட் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெண்களின் சுயமரியாதை மற்றும் ஒப்புதலை நகைச்சுவை என்ற பெயரில் கொச்சைப்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து, இந்த சர்ச்சையில் சிக்கிய ஸ்டாண்ட்-அப் காமெடியனும், பிக் பாஸ் மராத்தி 19 போட்டியாளருமான பிரணித் மோர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பகிர்ந்த இளைஞர் ஒருவர் தனது வேலையையும் இழந்துள்ளார்.
பிரணித் மோர் நடத்திய நேரடி ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சி ஒன்றின் போது, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஹிமான்ஷு ஜாங்க்டா என்ற இளைஞரிடம் டேட்டிங் அனுபவங்கள் குறித்து பேசப்பட்டது.
அப்போது அந்த இளைஞர், தான் ஒரு பெண்ணுடன் டேட்டிங் சென்றதாகவும், அங்கு இருவரும் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதாகவும் கூறினார். அதற்கான பில் தோராயமாக ரூ.360 முதல் ரூ.370 வரை வந்ததாகக் குறிப்பிட்ட அவர், ரூ.370 செலவு செய்துள்ளேன், அதனால் அந்தப் பெண்ணிடம் இருந்து அந்தப் பணத்தை நான் வட்டியும் முதலுமாக வசூல் செய்வேன் என்று இரட்டை அர்த்தத்தில், பெண்களின் சம்மதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசினார்.
இதைக் கேட்டு மேடையில் இருந்த பிரணித் மோர், அந்த இளைஞரைக் கண்டிக்காமல், அவருடன் சேர்ந்து சிரித்து, அதை ஒரு நகைச்சுவையாக்கி மேடையில் அரங்கேற்றினார். மேலும், இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்திலும் பகிர்ந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்யத் தொடங்கினர்.
வெறும் ரூ.370 பிரியாணி வாங்கித் தந்தால் ஒரு பெண்ணின் சம்மதத்தை விலைக்கு வாங்கிவிட முடியுமா? டேட்டிங்கை ஒரு மார்க்கெட் பிசினஸ் போலப் பார்க்கிறீர்களா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
நடிகை மால்தி சாஹர், திஷா பதானியின் சகோதரி குஷ்பூ பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள், நகைச்சுவை என்ற பெயரில் இவ்வளவு கீழ்த்தரமான ஆணாதிக்க சிந்தனையை ஊக்குவிப்பதா? ஏன் அந்த காமெடியன் மேடையிலேயே அந்த இளைஞரை தடுத்து நிறுத்தவில்லை? என்று சமூக வலைதளங்களில் சாடினர்.
சர்ச்சை விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, அந்த வீடியோவை பிரணித் மோர் உடனடியாக நீக்கினார். மேலும், நிலைமையை தான் கையாண்ட விதம் தவறு என்றும், மாற்று வழியில் இதனை அணுகியிருக்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டு பகிரங்க மன்னிப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இருப்பினும், நெட்டிசன்களின் தொடர் ட்ரோலிங் மற்றும் விமர்சனங்களைத் தாங்க முடியாமல், அவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை தற்போது தற்காலிகமாக முடக்கியுள்ளார். விமர்சனங்களில் இருந்து தப்பிக்கவே அவர் கணக்கை முடக்கி ஓடிவிட்டார் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சையின் அடுத்த கட்டமாக, மேடையில் அந்த மோசமான கருத்தைக் கூறிய இளைஞர் ஹிமான்ஷு ஜாங்க்டா, தற்போது தனது வேலையை இழந்துள்ளார்.
அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் சிஇஓ விவேக் விஸ்வகர்மா இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் எங்களது ஊழியர் ஹிமான்ஷு ஜாங்க்டா தொடர்பாக நூற்றுக்கணக்கான மெசேஜ்கள், மின்னஞ்சல்கள் மற்றும் போன் கால்கள் வந்தன. வைரல் வீடியோவை நானும் பார்த்தேன். அவர் கூறிய கருத்துக்கள் மிகவும் ஆபத்தானவை மற்றும் எங்களது நிறுவனத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானவை. இத்தகைய அநாகரிகமான நடத்தையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அவரை உடனடியாக வேலையிலிருந்து நீக்குகிறோம் என்று கூறியுள்ளார்.
வேலையை இழந்த அந்த இளைஞரும் தனது சமூக வலைதளக் கணக்குகளை முழுமையாக நீக்கியுள்ளார்.
