1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tragic Car Accident Near Karur Aravakurichi: Three Killed Including 8-Month Pregnant Woman As Car Hits Lorry

கவனக்குறைவாக சாலையை கடந்த நபர்.. விபத்தில் ஒரு குடும்பமே சிதைந்த பரிதாபம்..!

car accident
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நேரிட்ட பயங்கர சாலை விபத்தில், 8 மாத கர்ப்பிணி பெண் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் கார் அதிவேகமாக மோதியதால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
 
கார் வந்துகொண்டிருந்தபோது, அதன் வேகத்தை கவனிக்காமல் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அலட்சியமாக சாலையை கடக்க முயன்றுள்ளார். அவர் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக காரை ஓட்டுநர் திடீரென இடதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியுள்ளது. கார் அதிவேகத்தில் மோதியதால் அப்பளம் போல் நொறுங்கியது.
 
இவ்விபத்தில் காரில் பயணித்த உசிலம்பட்டியை சேர்ந்த அரவிந்த், அவரது 8 மாத கர்ப்பிணி மனைவி ஜனனி மற்றும் காரின் ஓட்டுநர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரில் இருந்த ஒரு சிறுமியும் மற்றொரு நபரும் படுகாயமடைந்தனர். விபத்திற்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டி லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஈரானுடன் போர் நிறுத்தம்!.. ஒருவழியாக சம்மதம் சொன்ன இஸ்ரேல் பிரதமர்!..