1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TKS Elangovan Terms TN CM Vijay's NITI Aayog Attendance and Meet with Rahul Gandhi as Routine and Normal

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்.. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்து இதுதான்...!

bharathi
இன்று டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கலந்து கொள்வது குறித்து, தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்வது வழக்கம். இது இந்திய அரசால் கூட்டப்படும் ஒரு வழக்கமான கூட்டம் என்பதால், தமிழக முதலமைச்சரும் இதில் பங்கேற்கிறார். இக்கூட்டம் முடிந்த பிறகே, தமிழகத்தின் சார்பில் அவர் என்ன பேசினார் என்பது நமக்கு தெரியவரும்" என்று கூறினார்.
 
மேலும், முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் குறித்து பேசிய டி.கே.எஸ். இளங்கோவன், "அவர் டெல்லி சென்றிருந்த போது குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் மற்றும் தங்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். 
 
அவர்கள் தற்போதைய அரசாங்கத்தின் கூட்டணி கூட்டாளிகள் என்பதால், இந்த சந்திப்புகள் அனைத்தும் மிகவும் இயல்பான ஒன்றுதான்" என்று விளக்கமளித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்திற்கு இடையே டெல்லியில் அரசியல் தலைவர்களை முதலமைச்சர் விஜய் சந்தித்துள்ளது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பிரியாணி டேட் விவகாரம் : இன்ஸ்டாவை மூடிய நகைச்சுவை நடிகர் பிரணித் மோர்