தொடர்புடைய செய்திகள்
- துரத்தி சென்ற சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் – தண்ணீரில் குதித்து உயிரைவிட்ட சிறுவன்
- வெள்ளத்தில் மிதக்கும் கர்நாடகம்: மீட்க விரைந்த எடியூரப்பா
- பசு பாதுகாப்பு: இளைஞர் வேலைவாய்ப்பு – யோகியின் பலே திட்டம்
- இதற்காகதான் வாழ்நாள் முழுக்க காத்திருந்தேன் – மனம் உருக வைக்கும் சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ட்வீட்
- காஷ்மீர் மக்களுக்கு உதவ பாகிஸ்தான் ராணுவம் வரும் – எச்சரிக்கை கொடுக்கிறதா பாகிஸ்தான்?
முன்னாள் ஜனாதிபதிக்கு விருது வழங்கிய இந்நாள் ஜனாதிபதி
இந்திய நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் “பாரத ரத்னா” விருதை முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இன்று வழங்கினார்கள்.
முன்னாள் ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜிக்கு “பாரத ரத்னா” வழங்கி கௌரவிக்கப்படும் என இப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருந்தார். மேலும் மறைந்த இசை மாமேதை பூபன் ஹசாரிகா மற்றும் சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கும் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பாரத ரத்னா விருது வழங்கும் விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு விருதை வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். மேலும் பூபன் ஹ்சாரிகா, நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கான விருதுகள் அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டன.
அடுத்த கட்டுரையில்
