1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. nationalised bank wont work for five days

ஸ்டிரைக்... தொடர் விடுமுறை!.. 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது!..

bank strike
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக 5 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

வருகிற 26ம் தேதி சனிக்கிழமை மாதத்தில் நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை.  அடுத்த நாள் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது.

அதன்பின் 28ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் தேசிய வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். எனவே இந்தியா முழுவதும் வருகிற 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர்ந்து வங்கி சேவைகள் நிறுத்தப்படவிருக்கிறது. இதையடுத்து, அதற்கு ஏற்ற்படி பொதுமக்கள் திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இளைஞரிடம் பண மோசடி!.. மிரட்டல்... பிக்பாஸ் பிரபலம் வர்ஷிணி கைது!..