1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Bank strike from sep28

செப் 28 முதல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.. 5 நாட்கள் வங்கிகள் செயல்படாதா?

bank strike
வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் செப்டம்பர் 28 முதல் 30 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய வங்கிச் சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், வன்முறை அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளைத் தவிர்க்கவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
 
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதிச் சேவைகள் துறையின் கோரிக்கையை ஏற்று, மாநிலங்களின் காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு மத்திய உள்துறை ஒரு குறிப்பு அனுப்பியுள்ளது. 
 
அதன்படி, வங்கிகளின் முக்கிய உள்கட்டமைப்புகளான 'கரன்சி செஸ்ட்கள்' எனப்படும் நாணய பெட்டகங்கள், காசோலை பரிமாற்ற மையங்கள், தரவு மையங்கள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
மேலும், வங்கி கிளைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைத் தீவிரமாகப் பராமரிக்கவும், வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்குச் செல்லும் ஊழியர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முன்னதாக, மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்த ஜியோ.. இனி 5ஜி ரோமிங் சேவை ரொம்ப ஈஸி..