1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. we can see instagram reels in smart tv

இனிமே TV-யிலும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்கலாம்!.. புதிய வசதி அறிமுகம்...

instagram
ஏற்கனவே யூடியூப் வீடியோக்களை ஸ்மார்ட் டிவிகளில் பார்க்கும் வசதிகள் வந்து விட்டன. இந்நிலையில்தான் பலரும் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராமை டிவியில் பார்க்கும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

மும்பையில் நடைபெற்ற ஹவுஸ் ஆப் இன்ஸ்டாகிராம் நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஆப்பிள் டிவி, அமேசான் ஃபயர் டிவி மற்றும் கூகுள் டிவி ஆதரவு சாதனங்களில் இன்னும் சில நாட்களில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

இதன் மூலம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஸ்டோரீஸ் உள்ளிட்டவற்றை பெரிய திரையிலும் பார்க்க முடியும். மேலும் ஒரே டிவியில் அதிகபட்சம் 5 இன்ஸ்டாகிராம்ம் கணக்குகளை இணைக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
திருப்பரங்குன்றத்தில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி.. இந்து அமைப்பினர் வாக்குவாதம்..