திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 3 ஏப்ரல் 2024 (07:17 IST)

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்.. 33 ஆண்டுகள் அரசியல் சேவை..!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 33 ஆண்டுகள் பாராளுமன்றத்தில் ராஜ்யசபா எம்பி யாக அரசியல் சேவை செய்த நிலையில் இன்றுடன் அவர் ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ்யசபா எம்பி பதவி வகித்த மன்மோகன் சிங் அவர்கள் பதவி இன்றுடன்  நிறைவு பெறுவதாகவும் இதனை அடுத்து அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறப்படுகிறது

மொத்தம் 49 ராஜ்யசபா எம்பிக்கள் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது என்றும் இன்றுடன் 5 ராஜ்ய சபா எம்பிகள் பதவி காலம் நிறைவு பெறுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ராஜ்யசபா எம்பி ஆக கடந்த 33 ஆண்டுகள் பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனை அடுத்து அவர் அரசியலில் இருந்து விலகி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அதற்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர் ஆக இருந்தார் என்பதும் அதற்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது 91 வயதாகும் மன்மோகன் சிங் அவர்கள் இனி அரசியலில் ஈடுபட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசகராக இருப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.

Edited by Siva