1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2024 (17:12 IST)

தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்

தோனி இத்தொடரில் விளையாடாமல் இருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும் என்று முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
 
ஐபிஎல் கிரிக்கெட் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடந்து வருகிறது. நடப்பு ஆண்டிற்காக ஐபில் போட்டி இன்று முதல் வரும் மே 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தி ; இன்றிரவு 8 மணிக்கு நடக்கும்  இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், பெங்களூரு அணி மோதவுள்ளது.
 
ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி, இத்தொடரில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அவருக்குபதிலாக
ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து, இந்திய முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர் கூறியதாவது: 

இதுசரியான முடிவில்லை. ஒருவேளை தோனி இத்தொடரில் விளையாடாமல் இருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.அவர் ஓய்வு பெற்று போட்டியின்போது அருகில் இல்லாமல் இருப்பதே புதிய கேப்டனில் சூழ் நிலைகளை எளிதாக்கும். தற்போது தோனி அருகில் இருப்பதால், அருகில் புதிய கேப்டனாக இருந்தாலும் வேலை கடினமாக இருக்கும்; தோனி இல்லாமல் இருந்தால் ருத்துராஜ் தன் சொந்த முடிவுகளை எடுக்க முடியும்  என்று தெரிவித்துள்ளார்.