திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2024 (12:36 IST)

கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்ல ரூ.20,000.. ஓய்வு பெற்ற நர்ஸ் கைது..!

கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டுபிடித்து சொல்வது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ. 20,000 பெற்று கருவில் இருக்கும் குழந்தை குறித்த தகவலை சட்டவிரோதமாக கூறிய ஓய்வு பெற்ற நர்ஸ்  கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திமதி என்ற ஓய்வு பெற்ற நர்ஸ் கடந்த ஐந்து ஆண்டுகளாக கர்ப்பிணி பெண்கள் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று சட்டவிரோதமான முறையில் தெரிவித்து இதற்காக அவர் இருபதாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது.

கடந்த ஐந்து வருடங்களாக இதை செய்து வரும் காந்திமதி சில சமயம் கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்த நிலையில் மருத்துவ அதிகாரிகள் அதிரடியாக வீட்டில் சோதனை செய்தபோது உண்மை தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து கையும் களவுமாக பிடிபட்ட நர்ஸ் காந்திமதியை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva