வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (15:06 IST)

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தினேஷ் கார்த்திக்?

Dinesh Karthik
பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல் வெளியாகிறது.
 
தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். இவர் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
 
சிறந்த விக்கெட் கீப்பராகவும்,  பேட்டிங்கிலும் அசத்தி வரும் இவர், இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரின்போது வர்ணனையாளராக உள்ளார்.
 
இந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடரில்  இருந்து அவர் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தொடங்கப்பட்டது முதல் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக். ஆரம்பத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார்.
அதன்பின்னர், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், பெங்களூர் சேலஞ்சர்ஸ், குஜராத், கொல்கத்தா ஆகிய  அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.
 
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 2 ஐபிஎல் போட்டிகளை தவறவிட்டுள்ளார்.  காந்த 2013 ஆம் ஆண்டு  மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது, இவ்வணிகோப்பை வென்றது. 
 
கொல்கத்தா அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்தாலும் இவர் தலைமையின் கீழ் கோப்பை வெல்லவில்லை.
 
தினேஷ் கார்த்திக் 240 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 4516 ரங்கள் எடுத்துள்ளார்.ஐபிஎல்-ல் அவரது சராசரி 25.81ஆகும்,அவும், ஸ்ரைக் ரேட் 132.71 ஆகவுள்ளது.
சிறந்த விக்கெட் கீப்பரான அவர் 133 டிஸ்மிசல்களையும், 36 ஸ்டம்பிங்குகளும் செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே  போட்டியில் பங்கேற்று தமிழ் நாடு அணிக்காக இவர் விளையாடிய  அதன்பிறகு கிரிக்கெட் போட்டியில் இவர் விளையாடவில்லை என்ற தகவல் வெளியாகிறது.
 
இந்த நிலையில், விரைவில் தினேஷ் கார்த்திக் தன் ஓய்வினை அறிப்பார் என கூறப்படுகிறது.