வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 27 மார்ச் 2024 (16:14 IST)

''சென்னை கிங்ஸுகு வெற்றி முகமே''- தமிழில் பாராட்டிய ஹர்பஜன் சிங்

Harbajan
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபில் கிரிக்கெட் போட்டியில்  இருந்து விளையாடிய நிலையில்,  கடந்த 2018- 2020 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும், 2021 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் விளையாடினார். 
 
அதன் பின்னர் சினிமாவிலும்  நடிகராக அறிமுகமானார்.
 
தமிழ்நாட்டின் மீது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீது பாசம் கொண்ட ஹர்பஜன் சிங் ஐபிஎல் கிரிக்கெட் பற்றியும், வீரர்களைப் பற்றியும் தன் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
 
இந்த நிலையில், தன் வலைதள பக்கத்தில் அவர்,
 
தமிழ்நாட்டு மக்களை "மஞ்சள் மேல்" பாய்சாக மாற்றிய எங்கள் தல தோனியே. வெற்றி உன் மேல் கொண்ட காதல் எதையும் தாண்டி புனிதமானது.வெற்றி மகுடம் சூட காத்திருப்போர் மத்தியில் வெற்றிக்கு மகுடமாக எப்போதும் நீ சிங்கம்தான். இம்முறையும் 
சென்னை கிங்ஸுகு வெற்றி முகமே'' என்று பதிவிட்டிருந்தார்.
 
இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நேற்றைய போட்டியில்  சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 207 ரன்களை குஜராத் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.  ஆனால் 20 ஓவரில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.  நேற்றைய போட்டியில் பெரிய வெற்றியைப் பதிவு செய்த சென்னை கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.