1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. karnataka bjp candidate says about election loss

தேர்தலில் என்னை தோற்கடித்த சமூகத்திற்கு தக்க பாடம் புகட்டுவேன்: பாஜக வேட்பாளர்

கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தது என்பதும் அங்கு காங்கிரஸ் கட்சியை அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது என்பதை தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் ஹாசன் என்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பிரீத்தம் கவுடா. இவரை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் ஸ்வரூப் பிரகாஷ் என்பவர் 7854 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 
 
இந்த நிலையில் தோல்வி அடைந்த பாஜக வேட்பாளர் பிரீத்தம் கவுடா நேற்று பேசிய போது, ‘தேர்தலில் என்னை தோற்கடித்த குறிப்பிட்ட சமூகத்திற்கு தக்க பாடம் புகட்டுவேன்; ஒரு குறிப்பிட்ட மக்கள் நமக்கு தீர்ப்பு வழங்கியுள்ளனர்; அந்த மக்களுக்கு வரும் நாட்களில் நாங்கள் யார் என்பதை காண்பிப்போம்" என்று கூறியுள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கேரளா ஸ்டோரியால் மாணவர்களிடையே மோதல்! – காஷ்மீரில் பரபரப்பு!