1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 மே 2023 (08:01 IST)

கர்நாடகா தேர்தல் முடிவை வைத்து மக்களவை தேர்தல் அமையும் என கூற முடியாது: கார்த்தி சிதம்பரம்..!

chidambaram
கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து இந்த வெற்றி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஆன கார்த்திக் சிதம்பரம் கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை வைத்து மக்களவைத் தேர்தல் அமையும் என்று கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
கர்நாடகா வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு பலத்தை கொடுக்கும்  என்றாலும் அது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூற முடியாது.  கர்நாடகாவில் ஆறு மாதங்களுக்கு முன்பே வாக்குறுதியை வெளியிட்டு தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது இதே உத்தியை நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த வேண்டும் 
 
மேலும் கர்நாடக மாநிலத்தில் டி.கே. சிவகுமார் சித்தராமையா ஆகிய தலைவர்கள் ஒற்றுமையுடன் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் அவர்களைப் போன்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையுடன் இல்லை. அதுபோன்ற தலைமையை உருவாக்கினால் தமிழகத்தில் நிச்சயம் பலன் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
 
Edited by Siva