1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 மே 2023 (10:27 IST)

யாரையும் முதுகுல குத்துற பழக்கம் இல்ல! – டி.கே.சிவக்குமாரின் முடிவு என்ன?

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் முதல்வர் யார் என்பது குறித்த குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் இன்று டி.கே.சிவக்குமார் டெல்லி புறப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடித்து தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ். ஆனாலும் முதல்வராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதில் குழப்பம் நிலவுகிறது. முதல்வர் பதவிக்கு முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே போட்டி உள்ளது.

ஆனால் கர்நாடக முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைமையே முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனால் தேர்தலுக்கு பின்னரும் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. ஒருவருக்கு முதல்வர் பதவி கொடுத்தால் மற்றவர் தனது ஆதரவாளர்களை திரட்டி கட்சியை பிளவுப்படுத்திடலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கர்நாடக மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் டெல்லி புறப்பட்டுள்ளார். செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 135 பேரும் ஒரே அணியில் ஒற்றுமையாக உள்ளோம். யாரையும் பிளவுப்படுத்த நான் விரும்பவில்லை. யார் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாநில தலைவராக நான் பொறுப்புடன் செயல்படுவேன். நான் யாரையும் முதுகில் குத்துவதோ மிரட்டுவதோ இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K