திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (22:42 IST)

பிரதமரின் டுவீட்டை காப்பி பேஸ்ட் செய்து மாட்டிக்கொண்ட பிரபல நடிகை

இன்டர்நெட், டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த நிலையில் இந்த தொழில்நுட்பத்தால் சில மோசமான பழக்க வழக்கங்களும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. குறிப்பாக ஒருவருடைய கற்பனையை இன்னொருவர் காப்பி பேஸ்ட் செய்து திருடுவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
 
இந்த நிலையில் பிரதமர் மோடி டுவிட் செய்த ஒரு ட்வீட்டை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து நடிகை ஒருவர் ட்வீட் செய்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மும்பை புனே தேசிய நெடுஞ்சாலையில் பழம்பெரும் நடிகை ஷபானா ஆஸ்மி கார் விபத்தில் சிக்கியதை அறிந்த பிரதமர் மோடி அவர்கள் தனது டுவிட்டரில் ஷபனா ஆஸ்மி விரைவில் குணமாக வேண்டுமென ஆண்டவனை வேண்டிக் கொள்வதாக ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார்
 
இந்த ட்விட்டை அப்படியே பிரபல கன்னட நடிகை ஊர்வசி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் காப்பி பேஸ்ட் செய்துள்ளார். இதனை நெட்டிசன்கள் கண்டுபிடித்து அவரை கலாய்த்து வருகின்றனர். பிரதமர் டுவிட்டை ரீடுவீட் செய்ய வேண்டும் அல்லது சொந்தமாக டுவீட் செய்ய வேண்டும் என்று அவருக்கு நெட்டிசன்கள் அறிவுரை கூறி வருகின்றனர். இதனை அடுத்து அந்த நடிகை காப்பி பேஸ்ட் டுவிட்டை டெலிட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது