வைத்திலிங்கம் வைத்த டிமாண்ட்!.. திமுகவில் இணைந்ததன் பின்னணி....
அதிமுகவில் ஒரத்தநாடு தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வைத்திலிங்கம். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பலமுறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து வெளியேற்றிய போது ஓபிஎஸ் உடன் சென்றவர்களில் வைத்திலிங்ககமும் ஒருவர்.
அதேநேரம் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்னமும் ஓபிஎஸ் ஒரு சரியான, தீர்க்கமான முடிவை எடுக்காமல் இருப்பதால் அவரை நம்பி அவருடன் வந்த பலரும் திமுக, தவெக, அதிமுக என தாவி விட்டனர். ஏற்கனவே மனோஜ் பாண்டியன், தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் ஆகியோர் திமுகவில் இணைந்தார்கள். அவர்களை தொடர்ந்து இன்று காலை வைத்திலிங்கமும் திமுகவில் இணைந்து விட்டார்.
வைத்திலிங்கத்தை திமுகவுக்கு கொண்டு வந்ததன் பின்னணியில் செந்தில் பாலாஜி இருப்பதாக சொல்லப்படுகிறது. வைத்திலிங்கம் வைத்த ஒரே டிமாண்ட் தனது மகனுக்கு ஒரத்தநாடு தொகுதியில் எம்எல்ஏ சீட் கொடுக்க வேண்டும் என்பதுதானாம். அதற்கும் திமுக தலைமையிடம் பேசி சம்பந்தம் வாங்கிவிட்டாராம் செந்தில் பாலாஜி. இதனையடுத்தே சந்தோஷமாக திமுகவில் இணைந்திருக்கிறார் வைத்தியலிங்கம் என சொல்கிறார்கள்.