1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: புதன், 21 ஜனவரி 2026 (17:54 IST)

தவெகவுக்கு என்ன சின்னம் கிடைக்கும்?!.. லிஸ்ட்டில் இருக்கும் சின்னங்கள் என்னென்ன?!...

vijay
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்திருக்கிறார். தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருக்கிறது. அதேநேரம் இப்போது அவரை அவர் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை.

அரசியல் கட்சி துவங்கியதுமே தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என அறிவித்தார் விஜய். ஆனால் அப்படி சொல்லியும் இப்போது வரை எந்த கட்சியும் தவெக பக்கம் செல்லவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கட்சிகளும் திமுக மற்றும் அதிமுக என்ற இரு கட்சிகளிலும் கூட்டணி அமைத்துவிட்டன. எனவே,
வருகிற  சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக என நான்கு முனை போட்டிகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

விஜய் ஏற்கனவே ஜனநாயகன் பட பிரச்சனை மற்றும் சிபிஐ விசாரணை என பல சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் தவெகவுக்கு வருகின்ற தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னம் கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு தவெகவினர் மத்தியில் எழுந்திருக்கிறது. அதேநேரம் அங்கீகரிக்கப்படாத கட்சியாக உள்ள தவெக தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றி ஆவணங்கலை தாக்கல் செய்திருப்பதால் அந்த கட்சிக்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில் உள்ளிட்ட 10 சின்னங்களை கொடுத்து அதில் ஏதேனும் ஒன்றை தங்களுக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் தவெக கோரிக்கை வைத்திருக்கிறது. அனேகமாக அதில் ஒரு சின்னம் தேர்தலுக்கு முன்பே தவெகவுக்கு ஒதுக்கப்படலாம் என செய்திகள் கசிந்திருக்கிறது.