1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 18 ஜனவரி 2020 (15:40 IST)

அந்த நடிகையுடன் நடிக்க பயந்து இயக்குனரிடம் கெஞ்சிய சூர்யா..!

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுள் ஒருவரான சூர்யா நட்சத்திர குடும்பத்தில் பிறந்து நேருக்கு நேர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து நந்தா , ஆறு , கஜினி , மௌனம் பேசியதே , பிதாமகன் , வேல், அயன் , வாரணம் ஆயிரம் , மாற்றான் , 7ம் அறிவு , சிங்கம் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரைட் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், சமீபத்தில் இயக்குனர் கௌதம் மேனன் Galatta WOW Awards விருது விழாவில் பங்கேற்று நடிகை சிம்ரனுக்கு தன் கையால் விருது வழங்கினார். பின்னர் சிம்ரன் குறித்து பேசிய அவர், வாரணம் ஆயிரம் படத்தில் சிம்ரன் உடன் நடிக்க நடிகர் சூர்யா முதலில் பயந்தார். 
 
எதற்காக என்றால் சிம்ரன் ஒரு காட்சியில் அவ்வளவு அருமையாக நடித்து கொண்டிருந்தார். அதை பார்த்த உடனே சூர்யா மிரண்டு விட்டார். உடனே என்னிடம் வந்து , எனக்கும் சிம்ரனுக்கும் காம்பினேஷன் காட்சி வைக்காதீங்க சார்... நான் அவங்களோட நடிப்பு திறமையையும் கொடுத்து விடுவேன் என்று கூறினார் என மேடையில் சிம்ரனின் திறமையை அவரே வெட்கப்படுமளவிற்கு கூறி பெருமைப்படுத்தினார் இயக்குனர் கௌதம் மேனன்.