1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Shabana ashmi car accident

தேசிய விருது பெற்ற பிரபல நடிகை விபத்தில் படுகாயம்!

ஷபனா ஆஷ்மி
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவரும், பிரபல பாலிவுட் நடிகையும், சமூக ஆர்வலருமான நடிகை ஷபானா ஆஸ்மி கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் 
 
நடிகை ஷபனா ஆஸ்மி நேற்று தனது கணவருடன் மும்பையிலிருந்து புனேவுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஷபனா ஆச்மிக்கு படுகாயம் ஏற்பட்டது. டிரைவர் மற்றும் ஷபனாவின் கணவர் ஆகியோர் சிறு காயத்துடன் உயிர் தப்பினர்
 
படுகாயம் அடைந்த நடிகை ஷபானா ஆஸ்மிஅருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் ஷபனா ஆஷ்மி விபத்தில் சிக்கியதை கேள்விப்பட்ட பிரதமர் மோடி மிகுந்த வருத்தம் தெரிவித்ததோடு விரைவில் அவர் குணமாக வேண்டுமென்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
பொங்கல் மதுவிற்பனை: சாதனை செய்த டாஸ்மாக்