புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (15:22 IST)

பிரதமர் மோடி இந்தியர்னு ஆதாரம் இருக்கா? ஆர்டிஐ மனு!

நாடு முழுவதிலும் என்.ஆர்.சி செயலபடுத்தப்படுமோ என்னும் கேள்விகளும், குழப்பங்களும் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி இந்தியர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மத்திய அரசு பல்வேறு விளக்கங்களை அளித்துள்ள போதிலும் மக்கள் போராட்டத்தை பல இடங்களில் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் உள்ள திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ் என்பவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடியுரிமை பெற்றவர்தானா? அவர் குடியுரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்கும் ஆவணம் எது என கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு என்ன பதில் வரும் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.