தொடர்புடைய செய்திகள்
- மெட்ராஸ் காரன்... ஆட்டோ சவாரிக்கு பணத்துக்கு பதில் வெங்காயம் ! வைரல் வீடியோ
- துப்பாக்கியை காட்டி மிரட்டிய காங்.,வேட்பாளர் : வாக்குச்சாவடியில் பரபரப்பு
- அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எவ்வாறு சறுக்கியது?
- வயிற்று வலினு போன ஆண்களுக்கு ப்ரெக்னென்சி டெஸ்ட்!
- ஒரு பைசா இல்ல.. தேர்தல் செலவுக்கு என்ன செய்வது ? காங்கிரஸ் தலைவர் புலம்பல்
ஜார்கண்ட் தேர்தல்: எக்சிட்போல் முடிவுகள்
ஜார்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையடுத்து இன்று 5வது கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் எக்சிட்போல் முடிவுகள் வெளியாகியுள்ளது
சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவின்படி ஜார்கண்ட் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்றும், காங்கிரஸ் கட்சி அடங்கிய மகாகட்பந்தன் தனிப்பெரும் கூட்டணியாக உருவெடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கூட்டணிக்கு 35 தொகுதிகளும், பாஜக கூட்டணிக்கு 32 தொகுதிகளும் கிடைக்கலாம் என்று சி வோட்டர் கணித்துள்ளது
இந்திய டுடே கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம்-ஆர்ஜேடி அணி 38 முதல் 50 இடங்களை கைப்பற்றும் என்று கூறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் மெஜாரிட்டிக்கு 42 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் தொங்கு சட்டசபை அல்லது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என எக்சிட்போல் கூறியிருப்பது உண்மையா? என்பதி வரும் 23ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
