1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ் கியான்
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (16:42 IST)

ஒரு பைசா இல்ல.. தேர்தல் செலவுக்கு என்ன செய்வது ? காங்கிரஸ் தலைவர் புலம்பல்

கோவை மாவட்டத்தில், இன்று, காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில்  காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார். அப்போது, அவர், வரும் இடைத்தேர்தலில் போட்டியிட கையில் காசு இல்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக, தனது கூட்டணி கட்சிகளுக்காக ரூ. 40 கோடி தேர்தல் நிதி வழங்கியது.  இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ரூ. 15 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 10 கோடி நன்கொடை வழங்கியதாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், இடைத்தேர்தலில் நாங்குநேரிதொகுதியில்  ரூபி.மனோகரன் மற்றும் புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியில் ஜான் குமார் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
 
இந்நிலையில், இன்று கோவையில் நடைபெற்ற காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி கலந்துகொண்டார். அப்போது, பேசிய அவர், இடைத்தேர்தலில் கோடிக்கணக்கில் பணம் புரளும் என்பதால் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் செலவு செய்ய ஒரு பைசா இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் திமுக கட்சி, மக்களவைப் பொதுத்தேர்தலில் தனது  கூட்டணிக்கட்சிகளுக்கு செலவு செய்ய நிதி உதவி அளித்துபோன்று இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு உதவுமா எனப் பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
 
நாங்குநேரி தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த தொழிலதிபர் வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவைத்  தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வெற்றி பெற்றதால், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக அந்த தொகுதியை ஒதுக்கியது. அதன்பின் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் அந்த தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தது. இந்நிலையில் ரூபி மனோகரனை அக்கட்சி அறிவித்துள்ளது. ஒருவேளை, பலகோடிகள் புரளும் என்பதால்,இடைத்தேர்தலில் குமரி ஆனந்தனுக்கு பதிலாக தொழிலதிபரான ரூபி. மனோகரனுக்கு கட்சி  மேலிடம் வாய்ப்பளித்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.