வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (12:30 IST)

வயிற்று வலினு போன ஆண்களுக்கு ப்ரெக்னென்சி டெஸ்ட்!

வயிற்று வலி என மருத்துவரிடம் சென்ற ஆண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்ய மருத்துவர் பரிந்துரைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கோபால் சஞ்சு மற்றும் காமேஸ்வர் ஜான்ஹூ வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் தங்களது குடியிருப்புக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். 
 
இவர்களை பரிசோதித்த அரசு மருத்துவர் முகேஷ் குமார், இருவரையும் கர்ப்பத்தை உறுதி செய்யும் பரிசோதனையை செய்யுமாறு பரிந்துரைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி ஆன இரு ஆண்களும் அம்மருத்துவமனையின் மூத்த மருத்துவரிடம் புகார் அளித்துள்ளனர். 
 
இந்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை பெண் ஒருவர் வயிற்று வலிக்கு சிகிச்சைக்கு வந்த போது அவருக்கு கருதடை செய்ய இந்த மருத்துவர் பரிந்துறைத்தது குறிப்பிடத்தக்கது.