புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (20:15 IST)

துப்பாக்கியை காட்டி மிரட்டிய காங்.,வேட்பாளர் : வாக்குச்சாவடியில் பரபரப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபை பொதுத்தேர்தலையொட்டி இன்று  முதற்கட்ட  நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவின் போது,காங்கிரஸ் வேட்பாளர் கே.என். திரிபாதி வாக்குச்சாவடிக்கு துப்பாக்கியுடன் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்டில் இன்றைய முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள கோஷியார கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த காங்கிரஸ் வேட்பாளர் கே.என். திரிபாதி ஆதரவாளர்களுக்கும், பாஜக வேட்பாளர் அலோக் சௌராஸ்யா என்பவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் வெடித்தது.
 
அப்போது, திரிபாதி தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பாஜக தொண்டர்களை சுட்டுவிடுவேன் என மிரட்டினார். இதனால் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.