1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Jamia protest 10 persons arrest

ஜாமியா வன்முறை; 10 பேர் கைது

ஜாமியா
டெல்லி ஜாமியா பல்கலைகழக வன்முறை தொடர்பாக 10 பேரை கைது செய்து உள்ளது டெல்லி போலீஸ்

டெல்லி ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது போலீஸாருக்கு மாணவர்களுக்கு இடையே கைகலப்பு நடந்ததில் வன்முறை வெடித்தது.

வன்முறையில் 3 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. பின்பு போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

இதனை தொடர்ந்து, இரவில் போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது. பின்பு பல்கலைகழக வளாகத்திற்குள் போலீஸார் நுழைந்தனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலைகழக வன்முறை தொடர்பாக குற்றப்பின்னணி உடைய 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
பாபர் மசூதியை இடிக்கும் போட்டி: ஆர்.எஸ்.எஸ் பள்ளியால் சர்ச்சை!