1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (10:52 IST)

பாபர் மசூதியை இடிக்கும் போட்டி: ஆர்.எஸ்.எஸ் பள்ளியால் சர்ச்சை!

கர்நாடகாவில் பள்ளி ஒன்றில்  பாபர் மசூதியை இடிப்பது போல போட்டி ஒன்று மாணவர்களுக்காக வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடகாவின் தக்‌ஷினா கன்னடா மாவட்டத்தில், ஸ்ரீ ராம வித்யகேந்திர பள்ளியில் பாபர் மசூதியின் பெரிய போஸ்டர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டரின் அருகே மாணவர்கள் பலர் நின்றிருந்தனர். அப்போது அந்த மசூதியை இடிக்கும் படி கூறப்பட்டது. 
 
உடனடியாக மாணவர்கள் கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு மசூதியை இடிக்கதுவங்கினர். இது வீடிவோக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த பள்ளியை நடத்தி வருபவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த கல்லட்கா பிராபகர் பாட் என்பவர் ஆவார். 
 
மேலும், இந்த பள்ளியில் நடந்த விழாவின் போது மத்தி அமைச்சர் சதானந்த கவுடா மற்றும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.