செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2019 (16:46 IST)

”அவர்கள் அனுமதி இல்லாமல் போலீஸ் உள்ளே நுழைந்திருக்க முடியாது”.. முன்னாள் முதல்வர் பகீர்

துணை வேந்தர் அனுமதி இல்லாமல் போலீஸ் பல்கலைகழகத்தில் நுழைந்திருக்க முடியாது என காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதில் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டத்தில் வன்முறை வெடித்தது.

வன்முறையில் 3 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. பின்பு போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

இதனை தொடர்ந்து, இரவில் போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது. பின்பு பல்கலைகழக வளாகத்திற்குள் போலீஸார் நுழைந்தனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் இது குறித்து பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ”துணை வேந்தர் அனுமதியில்லாமால் போலீஸாரால் ஜாமியா பல்கலைகழகத்திற்கு உள்ளே நுழைந்திருக்க முடியாது.
பல்கலைகழகத்திற்குள் போலீஸ் நுழைந்தது குறித்து நீதி விசாரணை தேவை என குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.