தொடர்புடைய செய்திகள்
- நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ... நடிகர் பிரகாஷ்ராஜ் ஓபன் டாக்
- பள்ளத்தை துல்லியமாக கண்டறிந்து பாதையை மாற்றியது ரோவர்: இஸ்ரோ தகவல்..!
- நிலவை தொட்டாச்சு.. அடுத்து சூரியன்தான்! – ஆதித்யா விண்கலம் புறப்படும் தேதி?
- சீனாவின் ரோவருக்கும் சந்திராயன் 3 ரோவருக்கும் இடையே உள்ள தூரம் இவ்வளவு தான்: இஸ்ரோ கணிப்பு
- நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வு செய்தது பிரக்யான் ரோவர்: இஸ்ரோ தகவல்..!
விண்ணில் பாயும் ’ஆதித்யா-L1’ விண்கலம்.. நேரில் காண பொதுமக்களுக்கு அனுமதி..!
சந்திராயன் 3 வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா L1 என்ற விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி விண்வெளியில் செலுத்தப்பட உள்ளது. இதை இணையதளம் மூலம் பொது மக்கள் பார்ப்பதற்கு இஸ்ரோ அனுமதி அளித்துள்ளது. இது குறித்த விவரம் பின்வருமாறு
இஸ்ரோவின் அதிகாரப்பூர்வத் தளமான https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளத்துக்கு முதலில் செல்ல வேண்டும்.
அதன்பின் ஆதார் அட்டை அல்லது அரசு அங்கீகரித்த ஏதேனும் அடையாள அட்டை மற்றும் செல்போன் எண் மூலம் இணையத்தில் Register பக்கத்தில் தேவையான தரவுகளை பதிவிட்டு அனுமதிச்சீட்டு பெற்றலாம்.
ஒரு அனுமதிச்சீட்டில் 2 பேர் வரை பதிவு செய்துகொள்ளலாம் என்றும், முன்பதிவு செய்வதற்கு இன்று நண்பகல் 12 மணிக்கு மேல் தொடங்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் ஆதித்யா L1 விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள லான்ச் வியூ கேலரியில் இருந்து நேரடியாக காணலாம் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
