வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (16:55 IST)

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ... நடிகர் பிரகாஷ்ராஜ் ஓபன் டாக்

vijay prakashraj
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால்  அவரிடம் நான் சில கேள்விகள் கேட்பேன் என்று  நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய  சினிமாவின் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ். இவர், சமீபத்தில், பொன்னியின் செல்வன் 1 மற்றும் பாகம் 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

சினிமாவில் நடிப்பதுடன், சமூக ஆர்வலராகவும், அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து தன் சமூக வலைதள பக்கங்களிலும், பேட்டிகளிலும் அவர் கூறி வருகிறார்.

இந்த நிலையில்,  நடிகர் விஜய் பற்றி அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதில் தயக்கமில்லை, அவரின் அரசியல் கொள்கைகள் ஏற்பது மக்களின் கையில்தான் உள்ளது.சினிமாவில்  கிடைக்கும் பிரபலம் மட்டும் அரசியலுக்கு உதவாது…ஏனென்றால் எம்.ஜி.ஆர் காலம் வேறு, இன்றைய காலம் வேறு என்றும், விஜய் அரசியலுக்கு வந்தால் நான் அவரிடம் சில கேள்விகள் கேட்பேன் என்று தெரிவித்துள்ளார்.