வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (15:21 IST)

நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வு செய்தது பிரக்யான் ரோவர்: இஸ்ரோ தகவல்..!

நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை பிரக்யான் ரோவர்  ஆய்வு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 
 
சமீபத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம், நிலவின் தென்துருவத்தை அடைந்தது என்பதும் சந்திராயனிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் தரையிறங்கியது என்பதும் அதன் பின்னர் அதிலிருந்து பிரக்யான் ரோவர்  தரை இறங்கி தற்போது நிலவை சுற்றி வருகிறது என்றும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நிலவின் தென்துருவத்தின் வெப்பநிலையை பிரக்யான் ரோவர் ஆய்வு செய்து அது குறித்த தகவல்களை  அனுப்பி இருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.  
 
நிலவின் தென் துருவத்தில் பல்வேறு  ஆழத்தில் நிலவும் வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாகவும் பிரக்யான் ரோவரில் உள்ள சாஸ்ட் என்னும் கருவி, நிலவின் வெப்பநிலையை ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
இந்த ஆய்வுக்கு பின்னர் தான் மனிதர்கள் வாழ தகுதியான வெப்பநிலை நிலவில் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva