வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (07:59 IST)

சீனாவின் ரோவருக்கும் சந்திராயன் 3 ரோவருக்கும் இடையே உள்ள தூரம் இவ்வளவு தான்: இஸ்ரோ கணிப்பு

இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சமீபத்தில் சந்திராயன் 3 என்ற விண்கலத்தை அனுப்பினார்கள் என்பதும் அந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் மற்றும் அதிலிருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
தற்போது இந்தியாவின் பிரக்யான் ரோவர், நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்து அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே சீனா நிலவுக்கு அனுப்பிய ரோவர்களுக்கும் சந்திராயன் 3 அனுப்பிய ரோவருக்கும் இடையே 1891 கிலோமீட்டர் இருக்கலாம் என  இஸ்ரோ கணித்துள்ளது 
 
ஒரே நேரத்தில் இந்தியா மற்றும் சீனாவின் ரோவர்கள்  நிலவில்ஆய்வு செய்வது வருவது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது எ
 
சீனா நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2007, 2010, 2013  ஆகிய ஆண்டுகளில் சாங்-எ என்ற ரோவர்களை நிலவுக்கு அனுப்பியது என்பதும்  அது தொடர்ந்து இன்னும் இரண்டு ரோவர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva