1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vijay Focuses on Tamil Nadu Development and Issue Based Politics over National Power Games

தமிழ்நாட்டு நலன், வளர்ச்சி தான் முக்கியம்.. மத்திய அரசுடன் மோதல் இல்லை.. முடிவெடுத்த முதல்வர் விஜய்...!

விஜய்
தளபதி விஜய்யின் முதன்மை நோக்கம் தமிழ்நாட்டின் சிறந்த நிர்வாகமும் அசுர வளர்ச்சியுமே தவிர, தேசிய அளவிலான அதிகார போட்டிகளோ அல்லது முடிவற்ற பாஜக எதிர்ப்பு அரசியலோ அல்ல என்பது அவரது சமீபத்திய நகர்வுகள் மூலம் தெளிவாகிறது. 
 
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, கடந்த வாரம் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு தவெக விட்டுக்கொடுத்ததை குறிப்பிடலாம். இதன் மூலம், தேவையில்லாத அரசியல் மோதல்களைத் தவிர்த்து மாநில நலனில் மட்டுமே விஜய் கவனம் செலுத்துகிறார் என்பது நிரூபணமாகியுள்ளது.
 
மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக உறுதியாக நிற்பதே தவெகவின் கொள்கையாக உள்ளது. மாநிலத்திற்குத் தேவையான நிதி, புதிய திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கு இணக்கமான மற்றும் நீடித்த ஒத்துழைப்பை வழங்குவதே சரியான உத்தி என்று விஜய் நம்புகிறார்.
 
ஒவ்வொரு விவகாரத்திலும் அரசியல் லாப நஷ்டங்களைப் பார்க்காமல், மக்கள் நலன் சார்ந்த "பிரச்சினை அடிப்படையிலான" அணுகுமுறையை கையில் எடுப்பதே தமிழ்நாட்டிற்கு உண்மையான மற்றும் உறுதியான பலன்களைத் தேடித்தரும். இந்த ஆக்கப்பூர்வமான அரசியல் உத்தி, தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையை அடுத்த கட்டத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கேஸ் கொடுக்க போன என் மேலேயே கேஸ் போட்ருக்காங்க.. வீடியோவில் புலம்பும் ஜூலி...