தொடர்புடைய செய்திகள்
- ஆதார் கார்டு இருக்கும் எல்லோருக்கும் இலவச எலக்ட்ரிக் சைக்கிளா? மத்திய அரசு விளக்கம்!
- ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா இந்தியா? - ட்ரம்ப் பேசியது குறித்து மத்திய அரசு விளக்கம்!
- ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சரின் பேட்டியில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது ஏன்? மத்திய அரசு விளக்கம்
- இந்தியாவில் டிக்டாக் மீதான தடை நீக்கப்பட்டதா? மத்திய அரசு விளக்கம்..!
- தேசிய விலங்காக பசுமாடு மாற்றப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்..!
ஜூன் 30 முதல் இந்திய ரூபாய் நோட்டுக்கள் செல்லாதா? மத்திய அரசு கொடுத்த விளக்கம்...!
இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படவிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளுக்கு மத்திய அரசு தற்பொழுது திட்டவட்டமான மறுப்பு தெரிவித்துள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் கிழிந்து போவதை தவிர்க்கும் வகையில், ஜூன் 30 முதல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளதாகவும், அன்றைய தினத்திலிருந்து காகித நோட்டுகள் செல்லாது என்றும் பரவிய வதந்திகள் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தின.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தற்பொழுது முக்கிய விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போதைக்கு மத்திய அரசிடம் இல்லை என்றும், காகித நோட்டுகள் செல்லாது என்று பரவும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி இதுதொடர்பான எந்தவொரு நிதி சார்ந்த தகவல்களையும், பொதுமக்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பங்களுக்குத் தெளிவான தீர்வு கிடைத்துள்ளது.
Edited by Siva
