1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India's Engineering Marvel: NHAI Scripts History with 4 Guinness World Records

சாலை அமைப்பதில் கின்னஸ் சாதனை செய்த ஆந்திரா.. ஆட்சின்னா இப்படி இருக்கனும்..

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உள்கட்டமைப்புத் துறையில் பிரம்மாண்டமான உலக சாதனையை நிகழ்த்தி ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்பட வைத்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் பெங்களூரு - விஜயவாடா பொருளாதார வழித்தடத்தில் வெறும் ஒரே வாரத்தில் 156 கி.மீ தூரத்திற்கு சாலை அமைத்து 4 கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளது.
 
குறிப்பாக, வெறும் 24 மணி நேரத்திற்குள் 28.89 லேன் கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்தர பிட்மினஸ் கான்கிரீட் தார்ச்சாலை அமைக்கப்பட்டிருப்பது பொறியியல் துறையில் ஒரு மைல்கல்லாகும். 
 
இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை தூரத்திற்கு சாலை அமைப்பது உலக அளவில் இதுவே முதல்முறை. அதிநவீன இயந்திரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த உழைப்பால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. இந்திய சாலைகளின் தரம் மற்றும் வேகமான கட்டுமான திறனை இந்த சாதனை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சிபிஐ விசாரணை கேட்டதே விஜய்தான்!.. இதுல என்ன பிரச்சனை?!.. ஹெச்.ராஜா கோபம்...