1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Hindi Imposition Warning: Raj Thackeray Threatens Protest Against Forcing Language

இந்தியை திணித்தால் உதை விழும்.. ராஜ் தாக்கரே அதிரடியாக எச்சரிக்கை..!

ராஜ் தாக்கரே
இந்தி மொழியை திணித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மகாராஷ்டிர நவநிர்மாண் சேவா தலைவர் ராஜ் தாக்கரே அதிரடியாக எச்சரித்துள்ளார்.
 
மராத்திய மண்ணில் மராத்தி மொழிக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். சமீபகாலமாக மத்திய அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்கள் இந்தியை முன்னிலைப்படுத்தி வருவதை கண்டித்துள்ள அவர், "இந்தியைத் திணித்தால் உதை விழும்" என தனது பாணியில் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.
 
மராத்திய கலாச்சாரம் மற்றும் மொழியின் அடையாளத்தை சிதைக்கும் வகையில் எந்த முயற்சி நடந்தாலும் அதனை தடுத்து நிறுத்துவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பிற மொழிகளை மதிப்பதாகவும், ஆனால் இந்தியை தாய்மொழி போல கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் அவர் வாதிடுகிறார். 
 
ராஜ் தாக்கரேவின் இந்த அதிரடி பேச்சு மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மொழிப்போர் தொடர்பான விவாதங்களை மீண்டும் முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு இந்தியை எதிர்ப்பதில் முன்னணி மாநிலமாக உள்ள நிலையில் தற்போது மகாராஷ்டிராவும் இந்திக்கு எதிராக திரும்பியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இந்த தொகுதியில் போட்டியிட்டால் 100% வெற்றி பெறுவேன்: நடிகை கெளதமி பேட்டி