தொடர்புடைய செய்திகள்
- பொய் வழக்கு போடுவதில் காட்டும் கவனத்தை கள்ளச்சாராயத்தில் காட்டுங்கள் சவுக்கு சங்கர் கோஷம்..!
- ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமின் கோரி வழக்கு.. காவல்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
- பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமின் மனு: கர்நாடக உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.!
- சவுக்கு சங்கர் சிறையில் திடீர் உண்ணாவிரதம்: வழக்கறிஞர் சொன்ன பரபரப்பு தகவல்..!
- கோவில் பூசாரி ஜாமின் மனு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி..!
சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி
சவுக்கு சங்கர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை எடிட் செய்திருக்கலாமே என ஃபெலிக்ஸ்க்கு கேள்வி கேட்ட நீதிபதி அவருடைய ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல் துறையில் உள்ள பெண் அதிகாரிகளை ஆபாசமாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் இதே வழக்கில் அவரை பேட்டி எடுக்க யூடியூப் சேனல் நிர்வாகி ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்டார்
ஃபெலிக்ஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது உள்நோக்கத்துடன் பெலிக்ஸ் கேள்வி கேட்டதாகவும் காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உயர் அதிகாரிகளின் பெயர்களை பேசியதாகவும் இதுபோன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
அப்போது ஃபெலிக்ஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 47 நாட்களாக தனது கட்சிக்காரர் சிறையில் இருப்பதாகவும் சவுக்கு சங்கரின் கருத்துக்கும் தமது கட்சிக்காரர் கருத்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.
அப்போது நீதிபதி சர்ச்சைக்குரிய கேள்விகளை எடிட் செய்திருக்கலாம், சவுக்கு ஷங்கரின் சர்ச்சை கூறிய கருத்துக்களையும் எடிட் செய்திருக்கலாம் ,எனவே ஒரு தவறான பிரச்சனையை தூண்டும் வகையில் தான் மனுதாரர் கேள்வி உள்ளது என்று கூறி அவருடைய ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
