வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2024 (17:18 IST)

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க ED எதிர்ப்பு..! வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!!

arvind kejriwal
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து கடந்த 2ம் தேதி டெல்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் சரண் அடைந்தார். முன்னதாக  மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என அர்விந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்தார்.

ஆனால் இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்ற அமர்வு மறுத்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.
 
இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.