புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (13:57 IST)

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு

இந்தியாவில் படிப்படியாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் இன்று மேலும் நான்கு பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
டெல்லியில் ஏற்கனவே 6 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் இன்று மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால் தலைநகரில் மொத்தம் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 32 பேர்கள் ராஜஸ்தானில் 10 பேர்கள் என இந்தியாவில் மொத்தம் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது