1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (11:03 IST)

தமிழகத்தில் நுழைந்த ஒமிக்ரான்: தினசரி வகுப்புகளுடன் பள்ளிகள் தொடருமா...?

ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து வரும் 25 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என தகவல். 

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளுக்கு பரவி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், மேற்கு வங்காளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தொற்று பரவி 72 பேருக்கு ஒமைக்ரான் உறுதியானது.
 
இந்நிலையில். தமிழகத்தில் ஒருவருக்கு  ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாகத் தமிழ்நாடு வந்த ஒருவருக்கு  ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கணகாணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் ஒமிக்ரான் நுழைந்துள்ளதால் பள்ளிகளை தொடர்ந்து நடத்துவதா அல்லது மீண்டும் ஆன்லைன் மூலம் பாடங்களை ஊக்குவிப்பதா என அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே ஒமிக்ரான் அச்சுறுத்தல் உள்ள நிலையில் தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து வரும் 25 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 
 
இந்த மாதத்தின் இறுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புதிய வருட பிறப்பு வருவதால் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் 25 ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடக்கும் ஆலோசனையின் பின்னர் ஜனவரியில் வகுப்புகள் எப்படி நடக்கும் என தெரியவரும்.