திங்கள், 26 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (11:57 IST)

ஒமிக்ரான் பாதிப்பு உள்ளவரோடு இருந்தவர்களுக்கும் கொரோனா! – மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் முதல் ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் வீரியமடைந்த வகை வைரஸான ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் உறுதியான நிலையில் தமிழகத்தில் முதல் ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

நைஜீரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் அவரை சோதித்ததில் அவருக்கு ஒமிக்ரான் இருப்பது உறுதியானது. இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒமிக்ரான் தொற்று உறுதியான நைஜீரிய நபருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி எடுத்துக் கொண்டு, கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.