மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம்
பெண்களின் மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சி அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரண்டு இளைஞர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது சரியல்ல என்றும், சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவது மற்றும் அவரது பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து இழுப்பது பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கின் பிரிவுகளை மாற்றி அமைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மீது ஐபிசி 354(B) பிரிவின் கீழ் அதாவது ஆடையை பிடித்து தாக்குதல் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran