திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (22:53 IST)

ஒமிக்ரான் அச்சத்தால் பள்ளிகள் மூடப்படுமா?

கடந்த ஆண்டு  சீனாவில் இருந்து உலகம் எங்கும் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸின் இரண்டாம் அலை தற்போது பரவி வருகிறது. விரையில் 3 வது அலை பரவ உள்ளதாகக்கூறப்படும் நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து கொரொனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய  ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட ஒரு சில நாடுகளில் மட்டும் பரவி இருந்த நிலையில் தற்போது 77 நாடுகளுக்கு பரவி உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி! இந்தியாவில் இதுவரை 9 மாநிலங்களில் 68 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக்ப பரவி வரும் நிலையில், தமிழகத்தில் 1 முதல்  8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூடி ஆன்லைன் வாயிலாகப் பாடங்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.