மருமகன் கொலை.. மகளை தூக்கிலிடுங்கள்: பெற்றோர் வைத்த கோரிக்கை..!
மருமகனை கொலை செய்த தங்களது மகள் வாழத் தகுதியற்றவள் என்றும், அவரை தூக்கிலிட வேண்டும் என்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில், பிரமோத்-கவிதா தம்பதியின் மகள் ரஸ்தோகி என்பவர் சவுரவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த நிலையில், கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்தார்.
இந்த கொலை அம்பலமானதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், தங்கள் மகள் இந்த சமூகத்தில் வாழத் தகுதியற்றவர் என்றும், அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அவருக்கு வழங்கப்படும் மரண தண்டனையை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றும், தங்கள் மருமகனுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து மிகுந்த கவலைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva