1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
  4. TN Elections 2026: Strict Security Measures in Place; Temporary Ban on Visiting Kovai Kutralam and Velliangiri Hills Tomorrow

நாளை வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல தடை: போலீசார் அறிவிப்பு..!

velliyangiri
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நாளை  நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1.47 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினரும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
 
தேர்தல் நாளான நாளை, பொதுமக்கள் தங்குதடையின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் கோவை மாவட்டத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை ஒரு நாள் மட்டும் கோவை குற்றாலம் அருவிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் அருகே உள்ள மலைக்குப் பக்தர்கள் செல்வதற்கும் வனத்துறை தற்காலிகத் தடை விதித்துள்ளது.
 
வாக்குப்பதிவு முடிந்து, மறுநாள் வெள்ளிக்கிழமை  அதிகாலை முதல் வழக்கம்போலப் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தடையை மீறி வனப்பகுதிக்குள் நுழைபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், மக்கள் அனைவரும் ஜனநாயகக் கடமையை ஆற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!