தேர்தலில் போட்டியிட சொந்த மகளை கொன்ற கொடூர தந்தை!.. ஆந்திராவில் அதிர்ச்சி..
தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாக இருந்த தனது மகளை சொந்த தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் நிசாம்பாத் மாவட்டம் எடப்பள்ளி பகுதியில் கால்வாயில் ஒரு சிறுமியின் உடல் கிடந்தது போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது..
எனவே சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டு அவரின் குடும்பத்தை தேடி வந்தனர். அதன்பின் போலீசாரின் விசாரணையில் அந்த சிறுமி மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டம் கேரூர் கிராமத்தை சேர்ந்தவள் என்பது தெரியவந்தது. அவரின் தந்தை பாண்டுரங்கிடம் போலீசார் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் ரணாக பதில் அளித்தார். அதன்பின் அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியே வந்தது.
பாண்டுரங்கத்திற்கு 6 வயதில் இரட்டைப் பெண் குழந்தைகள் மற்றும் 3 வயதில் ஒரு மகன் இருக்கிறார்,. பாண்டுரங்கிற்கு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் ஆசை ஏற்பட்டிருக்கிறது.. மராட்டியத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற விதி இருக்கிறது. எனவே, இரண்டு மகளில் மூத்தவளான பிராச்சியை(6) கொலை செய்ய திட்டமிட்ட அவர் மராட்டிய எல்லையில் உள்ள தெலுங்கானா மாநிலம் எடப்பள்ளிக்கு கூட்டி சென்று கால்வாயில் தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பாண்டுரங்கை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலையை செய்ய அவருக்கு உடைந்தையாக இருந்த பஞ்சாயத்து தலைவர் கணேஷ் ஷீண்டேவையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.