1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Clandestine Affair Leads to Brutal Murder: Woman Kills Husband with Lover in Andhra Pradesh

கள்ளக்காதலனுடன் சேர்த்து கணவரை கொலை செய்த மனைவி.. இரவு முழுவதும் ஆபாச படம் பார்த்த அதிர்ச்சி செயல்..!

Andhra Pradesh Crime
ஆந்திர பிரதேசத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
வெங்கடபாளையத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்பவரின் மகள் லட்சுமி மாதுரி, 2007-ல் லோகம் சிவநாகராஜுவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். விஜயவாடாவில் சினிமா டிக்கெட் கவுண்டரில் வேலை பார்த்து வந்த லட்சுமி மாதுரிக்கும், கார் டிராவல்ஸ் நடத்தி வந்த கோபி என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
 
தனது கணவனின் வெங்காய வியாபாரம் தனக்கு கௌரவ குறைவாக இருப்பதாக கூறி, அவரை ஹைதராபாத்திற்கு வேலைக்கு அனுப்பியுள்ளார் லட்சுமி. ஆனால், கணவன் மீண்டும் ஊருக்கே வந்துவிட்டதால், தங்கள் காதலுக்கு அவர் தடையாக இருப்பதாக கருதி அவரை கொல்ல திட்டமிட்டனர். ஜனவரி 18 அன்று இரவு, கணவனுக்கு பிடித்த பிரியாணியில் 20 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார் லட்சுமி. கணவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதும், நள்ளிரவு 11:30 மணிக்கு காதலன் கோபி வீட்டிற்கு வந்துள்ளார்.
 
கோபி கணவனின் நெஞ்சில் ஏறி அமர்ந்து பிடித்துக்கொள்ள, லட்சுமி மாதுரி தலையணையால் முகத்தை அழுத்தி அவரை கொலை செய்துள்ளார். கணவன் இறந்ததை உறுதி செய்த பின் காதலன் வெளியேற, லட்சுமி மாதுரி இரவு முழுவதும் வீட்டில் ஆபாச வீடியோக்களை பார்த்து கொண்டே இருந்துள்ளார். அதிகாலை 4 மணிக்கு, கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாக கூறி நாடகமாடியுள்ளார். ஆனால், பிரேத பரிசோதனையில் கணவனின் நெஞ்சு எலும்புகள் முறிந்திருப்பதும், மூச்சுத்திணறலால் அவர் இறந்திருப்பதும் உறுதியானது. தற்போது லட்சுமி மாதுரியைக் கைது செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள காதலன் கோபியை தேடி வருகின்றனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
திமுகவுக்கு எண்ட் கார்ட் போட்டாச்சி!.. கவுண்ட்டவுன் ஸ்டார்ட்!.. தெறிக்கவிட்ட மோடி!...