திங்கள், 16 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: வியாழன், 29 ஜனவரி 2026 (14:14 IST)

சென்னை நந்தனம் கல்லுரியில் பெண் பாலியல் பலாத்காரம்!.. 3 பேர் கைது!...

girl
சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் உள்ள கேண்டினில் அரியலூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் பணிபுரிந்து வருகிறார். 20 நாட்களுக்கு முன்புதான் அவர் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், கேண்டிலில் பணியாற்றி வரும் குணசேகர் 962) என்கிற முதியவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கல்லூரி காவலாளியிடம் அந்த பெண் கூறி புலம்பியிருக்கிறார்.

இதையடுத்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலாளி புகார் கொடுத்தார்.. எனவே போலீஸ் அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.. அப்போது கேண்டின் உரிமையாளர் செல்வம், அவரின் நண்பர் கார்த்திக் ஆகிய இருவரும் ஏற்கனவே அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதை தெரிந்து கொண்டுதான் குணசேகர் அந்த பெண்ணிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் அதிகாரிகள் கேண்டின் உரிமையாளர் செல்வம், அவரின் நண்பர் கார்த்திக் மற்றும் குணசேகர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.