தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் முடிந்தவுடன் ஓபிஎஸ் பா.ஜ.க.வில் சேர்ந்துவிடுவார்: ஜெயக்குமார் கணிப்பு..!
- தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சேர்ப்பு.. தேர்தல் பிரச்சாரம் செய்வாரா?
- EPFO வட்டி விகிதம் 8.25 சதவீதம் ஆக உயர்வு
- திராவிட_மாடல் அரசு பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச்சியில் என்றும் துணை நிற்கும்! -அமைச்சர் அன்பில் மகேஷ்
- பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் இழுபறி..! யாருக்கும் பெரும்பான்மை இல்லை..! கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு..!!
வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் அதிகரிப்பு.. தேர்தல் காரணமா?
கடந்த 2021 - 22 ஆம் ஆண்டில் வருங்கால வைப்பு நிதியின் வட்டி குறைக்கப்பட்ட நிலையில் தற்போது வருங்கால வைப்பு நிதியின் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது தேர்தலை கணக்கில் கொண்டா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
கடந்த 2015 - 2016 ஆம் ஆண்டில் 8.8 சதவீதமாக இருந்த வருங்கால வைப்பு நிதி வட்டி 2021 - 22ல் 8.1 சதவிகிதம் என குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
2023 - 24 ஆம் நிதி ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பின்னர் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்றத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலில் கணக்கில் கொண்டு வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது
Edited by Siva
